நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி


நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி
x
தினத்தந்தி 9 April 2017 10:15 PM GMT (Updated: 9 April 2017 6:55 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி–சிறப்பு பிரார்த்தனை

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று குருத்தோலை ஞாயிறு பவனி, சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

குருத்தோலை ஞாயிறு

ஏசு கிறிஸ்து பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு 3–ம் நாள் உயிர்த்தெழுந்த தினத்தை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். இந்த ஈஸ்டர் பண்டிகை வருகிற 16–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்கிடையில் ஏசு பாடுபடுவதற்கு முன்பாக 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அந்த நாட்களில் கழுதைக்குட்டியின் மேல் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவரை குருத்தோலைகளை ஏந்தி ஓசன்னா....ஓசன்னா என்ற பாடலை பாடி வரவேற்றனர் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிது.

அந்த நாளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாசம் மேற்கண்டு தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். அதில் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு என்று கடைபிடிக்கப்படுகிறது.

குருத்தோலை ஞாயிறு பிரார்த்தனை

இந்த வகையில் நேற்று குருத்தோலை திருநாள் ஊட்டியில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயம், புனித மரியன்னை ஆலயம், பிங்கர் போஸ்ட் தெரசா அன்னை ஆலயம், குருசடி திருத்தலம், சி.எஸ்.ஐ. திருச் சபைகளான ஊட்டி புனித ஸ்டீபன் ஆலயம், வெஸ்லி ஆலயம், புனித தாமஸ் ஆலயம், டிரிட்டினி ஆலயம், குழந்தை ஏசு ஆலயம், குன் னூர் சி.எஸ். ஆலயம், அன்னை வேளாங்கண்ணி ஆலயங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலையை ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்கள்.

பவனி

முன்னதாக நீலகிரி மறை மாவட்ட பி‌ஷப் டாக்டர் அமல்ராஜ் தலைமையில் மேரீஸ்ஹில் மரியன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மேலும் ஊட்டி புனித இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆலய பங்குதந்தை ஜான்ஜோசப் தலைமையில் சிறப்பு பிரார்த்னையும், திருப்பலியும் நடைபெற்றது. பிங்கர் போஸ்ட் திரெசா அன்னை ஆலயத்தில் அருட்தந்தை அமல் ராஜ் தலைமையிலும், குருசடி ஆலயத்தில் பங்குதந்தை பீட்டர் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

சி.எஸ்.ஐ. திருச்சபைகளான புனித தாமஸ் ஆலயத்தில் சகோதரர் ஜெரோம் தலைமை யிலும், வெஸ்லி ஆலயத்தில் ஸ்டீபன் ராஜ் தலைமையி லும் சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலையை ஏந்தி சிறப்பு பிரார்த்தனையை நடத்தினார்கள்.

குன்னூர்

குன்னூரில் உள்ள அந்தோணியார் ஆலயம், பாஸ்ஸ் கம்பெனி ஆரோக்கிய அன்னை ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு திருநாளை முன்னிட்டு, குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது.

குன்னூர் அருகில் உள்ள நல்லப்பன் தெரு, ஜோசப் ஆலயத்தில் குருத்தோலை பவனி ஊர்வலம் ஆலயத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதற்கு போதகர் சேகர குழு உறுப்பினர் ஜேக்கப் தலைமை தாங்கினார். இபோல் வெஸ்லி ஆலயத்தில் குருத்தோலை பவனி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதுபோல் கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட ஆலயங்களிலும் குருத்தோலை பவனிகள் நடைபெற்றன.


Next Story