சிதம்பரம், பு.முட்லூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


சிதம்பரம், பு.முட்லூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 9 April 2017 7:47 PM GMT (Updated: 2017-04-10T01:17:18+05:30)

சிதம்பரம் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.

சிதம்பரம்,

சிதம்பரம் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான சிதம்பரம் நகர பகுதிகள், அம்மாபேட்டை, மாரியப்பா நகர், வண்டிக்கேட், சி.முட்லூர், கீழ் அனுவம்பட்டு, வக்காரமாரி, அண்ணாமலை நகர், மணலூர், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம், பிச்சாவரம், கிள்ளை, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

இதேபோல் பு.முட்லூர் துணைமின் நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான பு.முட்லூர், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீத்தாம்பாளையம், குறியாமங்கலம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை பகுதிகளில் காலை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை சிதம்பரம் கோட்ட மின்செயற்பொறியாளர் சுந்தரம் தெரிவித்துள்ளார்.


Next Story