செய்யூர் அருகே டாஸ்மாக் கடை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு


செய்யூர் அருகே டாஸ்மாக் கடை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
x
தினத்தந்தி 9 April 2017 8:14 PM GMT (Updated: 2017-04-10T01:44:34+05:30)

செய்யூர் அருகே டாஸ்மாக் கடை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருடப்பட்டது.

மதுராந்தகம்

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த மேற்கு செய்யூரை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 42). டாஸ்மார்க் கடை ஊழியர். இவரது மனைவி ஆசிரியையாக உள்ளார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

நகை திருட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கநாதன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் நகை மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது. இது குறித்து ரங்கநாதன் செய்யூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து நகை திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story