சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்து விழிப்புணர்வு பேரணி


சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்து விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 9 April 2017 10:30 PM GMT (Updated: 2017-04-10T02:31:57+05:30)

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்து விழிப்புணர்வு பேரணி பாபநாசத்தில் நடந்தது

பாபநாசம்,

பாபநாசத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை தஞ்சை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி சரவணன் தொடங்கி வைத்தார். பேரணியின்போது சீமைக்கருவேல மரங்கள் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. பேரணியில் பாப நாசம் தாசில்தார் ராணி, பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் மனோகர், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமரகுரு, மண்டல துணை தாசில்தார்கள் சுந்தரமூர்த்தி, சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் பிராங்க்ளின், கிராம நிர்வாக அதிகாரிகள் செல்வராணி, விஜயலட்சுமி, மணிமாறன் மற்றும் பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர். 

Next Story