பங்குனி உத்திர திருவிழா: மகாமக குளத்தில் தீர்த்தவாரி


பங்குனி உத்திர திருவிழா: மகாமக குளத்தில் தீர்த்தவாரி
x
தினத்தந்தி 9 April 2017 10:30 PM GMT (Updated: 9 April 2017 9:02 PM GMT)

பங்குனி உத்திர திருவிழா: மகாமக குளத்தில் தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனித நீராடினர்

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கடந்த 6-ந் தேதி திருக்கல்யாணம், 8-ந் தேதி தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதேபோல் ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கோவில்களில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியையொட்டி நாகேஸ்வரர் பிரகன்நாயகி அம்மனுடனும், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் அனந்தநிதியம்பிகையுடனும் மகாமக குளத்தில் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து மகாமக குளத்தில் உள்ள கிணற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் அஸ்திரதேவருக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.


Next Story