இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம்
x
தினத்தந்தி 9 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-10T02:33:36+05:30)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம்

நெல்லை,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் மீரான் மைதீன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோதர் மைதீன், மாவட்ட செயலாளர் பாடப்பத்து முகம்மது அலி, பொருளாளர் கானத்து மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், "வருகிற 22–ந் தேதி பேட்டையில் மாணவ–மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டு முகாமை நடத்த வேண்டும், ஏழை மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் படித்த மாணவர்கள் சுய தொழில் தொடங்க வங்கிகள் வட்டியில்லாமல் கடன் வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் மசூது, இளைஞர் அணி செயலாளர் கடாபி, நிர்வாகிகள் நாகூர் கனி, காதர் மஸ்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story