புத்தளம் அருகே கிணற்றில் விழுந்த மயில் மீட்பு


புத்தளம் அருகே கிணற்றில் விழுந்த மயில் மீட்பு
x
தினத்தந்தி 9 April 2017 10:30 PM GMT (Updated: 2017-04-10T02:33:59+05:30)

புத்தளம் அருகே கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

தென்தாமரைகுளம்,

புத்தளம் அருகே தெற்குதேரிவிளையில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் சுமார் 40 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இந்த

கிணற்றில் தற்போது தண்ணீர் இல்லை. இந்தநிலையில், அந்த வழியாக சென்ற ஒருவர், கிணற்றுக்குள் தண்ணீர் உள்ளதா?

என எட்டிப்பார்த்தார். அப்போது, கிணற்றுக்குள் ஒரு மயில் வெளியே வரமுடியாத நிலையில் காயங்களுடன் கிடந்தது.

இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அதிகாரி சத்யகுமார்

தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றுக்குள் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனர்.


Next Story