கன்னியாகுமரியில் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்


கன்னியாகுமரியில் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்
x
தினத்தந்தி 9 April 2017 10:15 PM GMT (Updated: 2017-04-10T02:33:58+05:30)

கன்னியாகுமரியில் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தங்கு விடுதிகளுக்கு தேவையான தண்ணீர் சுற்றுவட்டார பகுதிகளில்

இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. இதற்காக பால்குளம், கல்லுவிளை, தலக்குளம் போன்ற பகுதிகளில்

தனியார் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சி கன்னியாகுமரி பேரூராட்சியில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், பால்குளம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதாக பொதுமக்கள் புகார் கூறினர்.

இந்தநிலையில், பால்குளம் பகுதியில் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது,

அந்த வழியாக  தண்ணீர் கொண்டு வந்த 3 லாரிகளை பறிமுதல் செய்தனர். இதனை கண்டித்து கன்னியாகுமரிக்கு குடிநீர்

வினியோகம் செய்யும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அத்துடன், தாங்கள் முறையான

அனுமதி பெற்றுதான் தண்ணீர் வினியோகம் செய்வதாக ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, அதிகாரிகள்

மற்றும் லாரி உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டம்

வாபஸ் பெறப்பட்டது.


Next Story