வெவ்வேறு சம்பவங்களில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் சாவு


வெவ்வேறு சம்பவங்களில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் சாவு
x
தினத்தந்தி 9 April 2017 10:15 PM GMT (Updated: 2017-04-10T02:34:02+05:30)

குமரி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் நேற்று ரெயிலில் அடிபட்டு 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி அருகே சந்தையடி ரெயில் தண்டவாளத்தில் நேற்று காலை ஒரு முதியவர் பிணம் கிடந்தது. இதைப் பார்த்த

பொதுமக்கள் உடனடியாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு

விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் பூதப்பாண்டி துவரங்காடு பகுதியை சேர்ந்த தங்கையா

நாடார் (வயது 95) என்பது தெரியவந்தது. தங்கையா நாடாரின் மகன் வீடு சந்தையடியில் உள்ளது. இந்த நிலையில் மகன்

வீட்டுக்கு வந்த அவர் அப்பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றதாகவும், அப்போது அந்த வழியாக வந்த

ரெயிலில் அடிபட்டு அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

வாலிபர் பிணம்

இதுபோல நாகர்கோவில் புத்தேரி மேம்பாலத்துக்கு கீழ் தண்டவாளத்தில் படுகாயங்களுடன் ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். இதுதொடர்பாக போலீசார்

விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.

அவருக்கு சுமார் 35 வயது இருக்கும். சாம்பல் நிற டி–சர்ட்டும், சந்தன நிற பேன்ட்டும் அணிந்திருந்தார். அவர், ரெயிலில்

பயணம் செய்தபோது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து, ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார்

சந்தேகிக்கின்றனர்.

இந்த 2 பிணங்களும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி

வைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story