சவுதி அரேபியாவில் கொத்தடிமைகளாக இருந்த 5 பெண்கள் மீட்பு


சவுதி அரேபியாவில் கொத்தடிமைகளாக இருந்த 5 பெண்கள் மீட்பு
x
தினத்தந்தி 9 April 2017 10:15 PM GMT (Updated: 2017-04-10T03:10:43+05:30)

சவுதி அரேபியாவில் கொத்தடிமைகளாக இருந்த 5 பெண்கள் மீட்பு விமானம் மூலம் 2 பேர் சென்னை வந்தனர்

ஆலந்தூர்

தமிழகத்தில் உள்ள கடலூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பா ஆகிய பகுதிகளில் இருந்து 5 பெண்கள் சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்கு சென்றனர். அங்கு கடந்த சில ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்த இவர்கள் 5 பேரையும் அங்கிருந்த தன்னார்வ அமைப்புகள் மீட்டனர்.

இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் ரியாத்தில் இருந்து நேற்று முன்தினம் அவர்கள் 5 பேரும் டெல்லிக்கு வந்தனர். அங்கிருந்து கடலூர் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த 30 மற்றும் 32 வயது பெண்கள் 2 பேர் மட்டும் விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர் இருவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றார்.

மீதம் உள்ள 3 பெண்களும், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.


Next Story