இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 April 2017 10:00 PM GMT (Updated: 2017-04-11T00:42:58+05:30)

ஊட்டி நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊட்டி

ஊட்டி நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வினோத்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஆல்தொரை தொடங்கி வைத்து பேசியதாவது:– ஊட்டி மேல்கோடப்பமந்து அம்பேத்கார் காலனி பகுதியில் சுமார் 35 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த குடியிருப்பு அருகே உள்ள வனப்பகுதியில் உள்ள ஊற்று தண்ணீர் ஓடையில் கலந்து வீணாகி வருகிறது. எனவே இந்த பகுதியில் நீர்தேக்க தொட்டி அமைத்து, அங்கிருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு குழாய்கள் அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும். இதன் மூலம் இந்த பகுதி பொதுமக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அரசு ஊழியர் சங்கம் சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

நீலகிரி மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊட்டியில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆஸரா கோரிக்கைள் குறித்து விளக்கி பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். 8–வது ஊதிய மாற்ற குழுவை உடனே அமைத்து ஊதிய மாற்றம் செய்திட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முன்னாள் மாநில செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story