தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தடை


தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தடை
x
தினத்தந்தி 10 April 2017 10:15 PM GMT (Updated: 10 April 2017 9:02 PM GMT)

தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் தெரிவித்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வரலாறு காணாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டுள்ள போதிலும் இந்த அணைகளில் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது.

இதன் மூலம் வருகிற மே மாதம் 15–ந் தேதி வரை பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும். மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

தண்ணீர் எடுக்க தடை


நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க ஐகோர்ட்டு தடை விதித்ததால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த தடையை ஐகோர்ட்டு விலக்கிக் கொண்ட போதிலும், வறட்சியின் காரணமாக தற்போது வரை வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. வருகிற 30–ந் தேதி வரை தண்ணீர் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அந்த வளாகத்தில் உள்ள மற்ற நிறுவனங்களும் தாமிரபரணி ஆற்றில் இருந்து வருகிற 30–ந் தேதி வரை தண்ணீர் எடுக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story