‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
கவிஞர் ராமலிங்கம் பிள்ளை வரைந்த கோபால கிருஷ்ண கோகலேயின் ஓவியம்.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை.
தமிழர்களை தலை நிமிர வைக்கும் பாடலைப் பாடியவர் ‘நாமக்கல் கவிஞர்’ என்று அழைக்கப்படும் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை.
நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி அம்மணியம்மாள். இந்த தம்பதிக்கு கடந்த 1888-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந் தேதி 8-வது குழந்தையாக பிறந்தவர் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை.
இவர், நாமக்கல் நம்மாழ்வார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். பின்னர் காந்திய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு, 1930-ல் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் ராஜாஜியுடன் திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை நடைபயணமாக சென்றார்.
இவர் பாடிய “கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது...” என்ற பாடல் வழிநடை பாடலாக அமைந்தது. மேலும் ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற கவிஞரின் வரிகள் தமிழில் நாட்டுப்பற்றையும், தமிழ் உணர்வையும் மக்களிடையே வளர்த்தது.
இவர் ஓவியராக, பேச்சாளராக, விடுதலை போராட்ட வீரராக பல்வேறு பரிமாணங்களில் சிறந்து விளங்கினார். இதனால் 1971-ம் ஆண்டு ‘பத்மபூஷண்’ விருது இவருக்கு கிடைத்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 10 அடுக்குமாடி கட்டிடத்திற்கு ‘நாமக்கல் கவிஞர் மாளிகை’ என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இவர் வரைந்த சுதந்திர போராட்ட தியாகி கோபால கிருஷ்ண கோகலேவின் ஓவியம் இன்றும் பழமை மாறாமல் இருந்து வருகிறது. இந்த ஓவியம் கவிஞரை சிறந்த ஓவியர் என நாட்டுக்கு எடுத்து காட்டுவதாக அமைந்து உள்ளது. தற்போது இந்த ஓவியம் நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த ஓவியத்தை இங்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பார்வையிட்டு செல்கின்றனர்.

Next Story