கடையநல்லூர் அருகே 2 வீடுகளை உடைத்து நகை–பணம் கொள்ளை


கடையநல்லூர் அருகே 2 வீடுகளை உடைத்து நகை–பணம் கொள்ளை
x
தினத்தந்தி 6 May 2017 7:45 PM GMT (Updated: 2017-05-06T20:03:02+05:30)

கடையநல்லூர் அருகே உள்ள மாவடிக்கால் கிராமத்தை சேர்ந்த குமாரசாமி மகன் மணிகண்டன் (வயது 32). இவர் தனது குடும்பத்துடன் புல்லுக்காட்டுவலசையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றிருந்தார்.

கடையநல்லூர்,

கடையநல்லூர் அருகே உள்ள மாவடிக்கால் கிராமத்தை சேர்ந்த குமாரசாமி மகன் மணிகண்டன் (வயது 32). இவர் தனது குடும்பத்துடன் புல்லுக்காட்டுவலசையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 14 பவுன் நகை மற்றும் 79 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதேபோல் அதே பகுதியில் வ.உ.சி தெருவில் வசித்து வரும் அவரது உறவினர் மணி (37) என்பவரும் புல்லுக்காட்டுவலசையில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். அவரது வீட்டிலும் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2½ பவுன் நகை மற்றும் 1½ லட்சம் ரூபாயையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கடையநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story