வெவ்வேறு இடங்களில் சாலையை கடந்த போது வாகனம் மோதி 3 மான்கள் பலி

வெவ்வேறு இடங்களில் சாலையை கடந்த போது வாகனம் மோதி 3 மான்கள் பலியாயின.
நல்லம்பள்ளி,
தர்மபுரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிக அளவில் உள்ளன. கடும் வறட்சி மற்றும் வெயிலின் தாக்கத்தால் வனவிலங்குகள் குடிநீர் மற்றும் உணவு தேடி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வரத்தொடங்கி உள்ளன. இந்த நிலையில் தொப்பூர் கணவாய் வெள்ளக்கல் வனப்பகுதியில் இருந்து நர்சரி பண்ணை வனப்பகுதிக்கு குடிநீர் தேடி ஒரு புள்ளிமான் நேற்று வந்தது.
இந்த மான் அந்த பகுதியில் உள்ள தர்மபுரி-சேலம் நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
3 மான்கள் இறப்பு
இதே போல் அரூர்-மொரப்பூர் சாலையில் தண்டக்குப்பம் என்ற இடத்தில் நேற்று சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் அந்த வழியாக வந்த வாகனம் மோதி உயிரிழந்தது. தீர்த்தமலை அருகே பொய்யப்பட்டி காப்புக்காட்டில் இருந்து உணவு தேடி வெளியே வந்த ஒருபுள்ளி மான் சாலையை கடந்தபோது வாகனம் மோதி உயிரிழந்தது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடங்களுக்கு சென்று உயிரிழந்த மான்களின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தினார்கள். ஒரே நாளில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 மான்கள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story