மோகனூர் காவிரி ஆற்றில் நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கும் பணி கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு


மோகனூர் காவிரி ஆற்றில் நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கும் பணி கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு
x
தினத்தந்தி 6 May 2017 11:00 PM GMT (Updated: 6 May 2017 8:01 PM GMT)

மோகனூர் காவிரி ஆற்றில் நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கும் பணியை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மோகனூர்,

மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஒருவந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட காவிரி ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் புதியதாக 2 நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல் மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் ஒரு நீர் உறிஞ்சும் கிணறும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், ஜேடர்பாளையம் பகுதியில் புதியதாக ஒரு நீர் உறிஞ்சும் கிணறும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான கட்டுமான பணியினை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

அப்போது அவர் அனைத்து பணிகளையும் விரைவாகவும், தரமாகவும் முடித்து, பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மோகனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story