இலவச வை–பை மூலம் 30 ஆயிரம் பேர் ஆபாச படங்களை பார்த்துள்ளனர்


இலவச வை–பை மூலம் 30 ஆயிரம் பேர் ஆபாச படங்களை பார்த்துள்ளனர்
x
தினத்தந்தி 6 May 2017 9:24 PM GMT (Updated: 2017-05-07T02:53:53+05:30)

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மாநில அரசு மும்பையில் இலவச வை–பை வசதியை கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைத்தது.

மும்பை,

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மாநில அரசு மும்பையில் இலவச வை–பை வசதியை கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைத்தது. முதல் கட்டமாக மும்பையில் உள்ள 500 இடங்களில் வை–பை சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநில தகவல் தொடர்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

இதுவரை இலவச வை–பை வசதியை சுமார் 3 லட்சம் பேர் பயன்படுத்தி உள்ளனர். இவர்களில் 10 சதவீதம் பேர் அதவாது 30 ஆயிரம் பேர் இலவச வை–பை மூலம் ஆபாச படங்களை பார்த்துள்ளனர். இதுவரை 38 ஆபாச இணையதள பக்கத்தை முடக்க மத்திய தகவல் தொடர்பு துறைக்கு கடிதம் எழுதி உள்ளோம். ஆனால் முடக்கினாலும் புதிய பெயர்களில் ஆபாச இணையதளங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆபாச இணையதள பக்கங்களை முடக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story