ஸ்மார்ட் கார்டு கிடைக்க பெறாதவர்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்


ஸ்மார்ட் கார்டு கிடைக்க பெறாதவர்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 6 May 2017 10:00 PM GMT (Updated: 2017-05-07T02:56:23+05:30)

ஸ்மார்ட் கார்டு கிடைக்க பெறாதவர்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் கலெக்டர் மலர்விழி தகவல்

சிவகங்கை,

ஸ்மார்ட் கார்டு கிடைக்காதவர்கள் சம்பந்தப்பட்ட நியாய விலை கடைகளுக்கு சென்று புகைப்படம் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று சிவகங்கை கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் கார்டு

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களில் அனைத்து விவரங்களும் சரியாக இருந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு அச்சிடப்பட்டு கடந்த மாதம் 1–ந்தேதி முதல் நியாய விலை கடைகள் மூலமாக சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

இதில் இதுவரை ஏராளமானோருக்கு ஸ்மார்ட் கார்டு கிடைக்கவில்லை. ஸ்மார்ட் கிடைக்க பெறாதவர்களின் புகைப்பட விவரம் சரியாக அமையாததே இதற்கு காரணம். எனவே அவர்கள் சம்பந்தப்பட்ட நியாய விலை கடைகளுக்கு சென்று ஸ்மார்ட் போனில் TNEPDS என்ற மொபைல் அப் முலம் புகைப்படம் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

விவரங்கள்

இதுதவிர, சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் பெயர், உறவுமுறை, முகவரி மற்றும் பிறந்த நாள் ஆகியவற்றில் பிழைகள் இருப்பின் அவற்றை நியாய விலை கடையில் பராமரிக்கும் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளவும். இதன் அனைத்து விவரங்களையும் www.tnpds.com என்ற பொது விநியோகத் திட்ட இணையதளத்திலும், வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் செயல்படும் அரசு பொது இ–சேவை மையங்களிலும் தங்களது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான விவரங்களை வருகிற 10–ந்தேதிக்குள் நேரில் சென்று சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story