சென்னையில் மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு


சென்னையில் மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 May 2017 11:15 PM GMT (Updated: 2017-05-07T03:21:28+05:30)

சென்னையில் மின்தடை ஏற்பட்டால் பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்களை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.

சென்னை,

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மின்மிகை மாநிலம்

மின்மிகை மாநிலமாகத் திகழும் தமிழகத்தில், மின்நுகர்வோர்களின் தேவைக்கேற்ப மின்சாரம் சீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது. கோடைகாலத்தில் ஏற்படும் அதிக மின்நுகர்வை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள அனல்மின் நிலையங்கள் மற்றும் காற்றாலைகளிலிருந்து பெறப்படும் மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் மட்டுமன்றி, தேவைக்கேற்ப மத்திய தொகுப்பில் இருந்தும் மின்சாரம் பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கோடைகாலத்தில் அதிக வெப்பத்தினால் மின் உபகரணங்களில் ஏற்படும் சிறுபழுதுகளால் மின் விநியோகத்தில் ஏற்படும் தடைகளை உடனுக்குடன் கண்டறிந்து சீர் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இடையூறு தகவல்கள்

மின்உபகரணங்களில் சிறுபழுதுகளால் ஏற்படும் மின் இடையூறு குறித்த தகவல்களை தெரிந்து, உடனுக்குடன் சீர் செய்யும் வகையில் பொதுமக்கள் தலைமையிட மின்தடை தகவல் மையத்திற்கோ அல்லது சம்மந்தப்பட்ட பகுதிகளிலுள்ள செயற்பொறியாளர்களுக்கோ அல்லது மின்தடை தகவல் மையங்களுக்கோ மின் இடையூறு தகவல்களை தெரிவிக்கலாம்.
செயற்பொறியாளர்கள் மற்றும் மின்தடை தகவல் மைய தொலைபேசி எண்கள் மின்வாரிய இணைய தளத்தில் ( www.tangedco.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்கள்

கணினி மின்தடை தகவல் மையம் 1912, மின்துறை அமைச்சர் முகாம் 044 - 2495 9525, சென்னை தலைமையிட மின்தடை தகவல் மையம் 044 -2852 4422 மற்றும் 044-2852 1109 தகவல் தெரிவிக்கலாம்.

இதுதவிர வியாசர்பாடி செயற்பொறியாளர் 94458-50871, தண்டையார்பேட்டை செயற்பொறியாளர் 94458-50889, பொன்னேரி செயற்பொறியாளர் 94458-50915, பெரம்பூர் செயற்பொறியாளர் 94458-50959, அண்ணாசாலை செயற்பொறியாளர் 94458-50686, மயிலாப்பூர் செயற்பொறியாளர் 94458- 50717, தியாகராயநகர் செயற்பொறியாளர் 94458- 50727, அடையார் செயற்பொறியாளர் 94458-50555, கிண்டி செயற்பொறியாளர் 94458-50179, கே.கே.நகர் செயற்பொறியாளர் 94458-50202, போரூர் செயற்பொறியாளர் 94458-50258, தாம்பரம் செயற்பொறியாளர் 94458-50227, ஐ.டி. வளாகம் செயற்பொறியாளர் 94458-50164, அம்பத்தூர் செயற்பொறியாளர் 94458-50311, அண்ணாநகர் செயற்பொறியாளர் 94458-50286, ஆவடி செயற்பொறியாளர் 94458-50344 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story