கீழக்கரையில் வீடுபுகுந்து நகை,பணம் திருடிய வாலிபர் மாடியில் இருந்து குதித்ததில் படுகாயத்துடன் சிக்கினான்


கீழக்கரையில்  வீடுபுகுந்து நகை,பணம் திருடிய வாலிபர் மாடியில் இருந்து குதித்ததில் படுகாயத்துடன் சிக்கினான்
x
தினத்தந்தி 12 May 2017 4:15 AM IST (Updated: 11 May 2017 6:59 PM IST)
t-max-icont-min-icon

கீழக்கரையில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கீழக்கரை,

கீழக்கரை பட்டாணி அப்பா தர்கா புதுகிழக்குத்தெரு பகுதியை சேர்ந்த அகமது என்பவருடைய மகன் அன்வர்தீன்(வயது 29). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். இந்தநிலையில் அன்வர்தீன் வீட்டின் மாடி கதவை திறந்து வைத்திருந்தார்.

அப்போது சத்தம் கேட்டு அன்வர்தீன் மற்றும் உறவினர்கள் வந்து பார்த்தனர். அப்போது வாலிபர் ஒருவர் வீடுபுகுந்து திருடிக்கொண்டு மாடியில் இருந்து குதித்து காலில் படுகாயத்துடன் தப்பிச்சென்றுவிட்டான். அவரை அடையாளம் கண்ட அன்வர்தீன் இதுகுறித்து கீழக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

கைது

அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்தநிலையில் காலில் காயம் அடைந்த வாலிபர் நடந்து செல்வதை கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகம்அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், கீழக்கரை வடக்குத்தெருவை சேர்ந்த பீர்முகமது என்பவருடைய மகன் சாதிக் அகமது(20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து சாதிக் அகமதுவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து அன்வர்தீன் வீட்டில் திருடிய ½ பவுன் மோதிரம், ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story