திருப்பத்தூர் அருகே ரேஷன் கடைகளில் பூட்டை உடைத்து அத்தியாவசிய பொருட்கள் திருட்டு
திருப்பத்தூர் அருகே நாச்சியாபுரம் மற்றும் ரணசிங்கபுரம் ரேஷன் கடைகளில் இருந்த சீனி, பாமாயில் உள்ளிட்ட
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே சிராவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் நாச்சியாபுரத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையினை வழக்கம்போல் நேற்று திறப்பதற்காக கடை பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன் வந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கடையின் கதவுகள் திறந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கடையினுள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த 5 மூடை சீனி, 51 லிட்டர் பாமாயில் ஆகியவை திருட்டு போய் இருந்தன. உடனே இதுகுறித்து ராதாகிருஷ்ணன் திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் ஆனந்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவலின்பேரில் விரைந்து வந்த வட்ட வழங்கல் அலுவலர் ஆனந்த், கடையினை ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து நாச்சியாபுரம் போலீஸ் நிலையத்தில், ரேஷன் கடையில் பொருட்கள் திருடப்பட்டு இருப்பது குறித்து புகார் அளித்தார்.
மற்றொரு கடைஇதேபோல் திருப்பத்தூர் அருகே தென்மாபட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் ரணசிங்கபுரத்தில் ரேஷன் செயல்பட்டு வருகிறது. இந்த கடையிலும் நேற்று கதவு பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த 2 மூடை சீனி, 10 லிட்டர் பாமாயில் மற்றும் 50 கிலோ கோதுமை ஆகியவை திருட்டு போய் இருந்தன. இதுகுறித்து கடையின் பொறுப்பாளர் புஷ்பம், திருப்பத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணைபுகார்களின்பேரில், ரேஷன் கடைகளில் புகுந்து அத்தியாவசிய பொருட்கள் திருடிய மர்மநபர்கள் யார் என்பது குறித்து நாச்சியாபுரம் மற்றும் திருப்பத்தூர் நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 கடைகளிலும் ஒரே நபர்கள் தான் பொருட்களை திருடினார்களா என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.