கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம் பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க கோரிக்கை
பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க கோரி கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க கோரி கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருக்கும் போராட்டம்கடந்த 2 ஆண்டுகளுக்கான பயிர் காப்பீட்டுத்தொகையை வழங்க வலியுறுத்தி, பாரதீய கிசான் சங்கம் சார்பில், கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நேற்று காலையில் நடந்தது. மாவட்ட தலைவர் ரங்கநாயகலு தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் பரமேசுவரன், செயலாளர் சேசுநாயக்கர், ஒன்றிய தலைவர்கள் ஜெயராமன், ஆஞ்சநேய ராமானுஜதாசன், துணை தலைவர்கள் கிருஷ்ணசாமி, நல்லையா, கிளை தலைவர்கள் மகாராஜன், ரவிச்சந்திரன், மகளிர் அணி தலைவி கிருஷ்ணம்மாள், கருப்பசாமி, செந்தில் முருகன், வைரமுத்து உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கோஷங்கள்கோரிக்கையை வலியுறுத்தி, தாலுகா அலுவலக வளாகத்தில் விவசாயிகள் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். அவர்களிடம், தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.