பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆசிரியர் கூட்டத்தில் தீர்மானம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆசிரியர் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 12 May 2017 3:45 AM IST (Updated: 12 May 2017 12:15 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுபா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஈவேரா, மாநில துணைச் செயலாளர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

6-வது ஊதியக்குழு முரண்பாடுகளை நீக்கி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான ஊதியம் என்ற அடிப்படையில் 7-வது ஊதியக்குழுவினை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொடக்கக்கல்வி துறைக்கு தனி ஆணையம் அமைக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி திருவாரூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியினை சிறப்பாக நடத்துவது.

கலந்தாய்வு

பணி மாறுதல் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அரசு முடிவு செய்துள்ளதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது. அதே நேரத்தில் காலி பணியிடங்களையும் விண்ணப்பதாரர்களின் முன்னுரிமை விபரங்களையும் முன்னரே அறிவித்து கணினியில் பதிவேற்றம் செய்து வெளிப்படை தன்மையுடன் பணி மாறுதல் கலந்தாய்வுகளை நடத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயந்தி, மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாராயணன், வடுகநாதன், ஸ்டாலின், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயசீலன், ஜூலியஸ், கிருபாராணி, முன்னாள் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story