பி.யூ. கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு முடிவு வெளியானது மாணவிகள் சுர்ஜனா, ராதிகா மாநிலத்தில் முதலிடம்


பி.யூ. கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு முடிவு வெளியானது மாணவிகள் சுர்ஜனா, ராதிகா மாநிலத்தில் முதலிடம்
x
தினத்தந்தி 12 May 2017 2:45 AM IST (Updated: 12 May 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

பி.யூ. கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வில் மாணவிகள் சுர்ஜனா, ராதிகா மாநிலத்தில் முதலிடம் பிடித்தனர். அவர்கள் 600-க்கு 596 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

மங்களூரு,

பி.யூ. கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வில் மாணவிகள் சுர்ஜனா, ராதிகா மாநிலத்தில் முதலிடம் பிடித்தனர். அவர்கள் 600-க்கு 596 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

தேர்வு முடிவுகள் வெளியானது

கர்நாடகத்தில் பி.யூ. கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நடந்தது. மாநிலம் முழுவதும் 6 லட்சத்து 79 ஆயிரத்து 61 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் நேற்று மதியம் வெளியானது. இதனை மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி தன்வீர் சேட் வெளியிட்டார். இதில் மொத்தம் 52.38 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்ச்சி சதவீதத்தில் முதல் 3 இடங்களை கடலோர மாவட்டங்கள் பிடித்துள்ளன. அதாவது, உடுப்பி 90.01 சதவீதமும், தட்சிண கன்னடா 89.92 சதவீதமும், உத்தர கன்னடா 71.99 சதவீதமும் ஆகும்.

2 மாணவிகள் மாநிலத்தில் முதலிடம்

இந்த தேர்வில் மங்களூரு நகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த சுர்ஜனா, உடுப்பி மாவட்டம் கங்கொல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த ராதிகா ஆகிய 2 மாணவிகளும் 600-க்கு 596 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். சுர்ஜனாவின் தாய் துமகூருவில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

Next Story