மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி மதுப்பிரியர்கள் முற்றுகை-சாலை மறியல்
மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி மதுப்பிரியர்கள் முற்றுகை போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர்,
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் சாலையோரம் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. கரூர் நகரை பொறுத்தவரை கரூர் ஜவகர் பஜாரில் மார்க்கெட் அருகே 2 டாஸ்மாக் கடைகள் மட்டும் செயல்பட்டு வந்தன. இதனால் தினமும் பகல் 12 மணிக்கெல்லாம் ஜவகர் பஜார் பகுதியில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதும். ஒரு சில நாட்களில் காலை 11 மணிக்கே டாஸ்மாக் கடை முன்பு வரிசையில் காத்து நின்று மதுபானம் வாங்கி செல்வார்கள்.
முற்றுகை போராட்டம்
இந்த நிலையில் ஜவகர் பஜாரில் டாஸ்மாக் கடைகள் முன்பு அதிக அளவு கூட்டம் கூடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு சில நேரங்களில் ஜவகர் பஜாரை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே ஜவகர் பஜாரில் செயல்பட்டு வரும் 2 டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்று வியாபாரிகள் உள்ளிட்ட பலர் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். தொடர்ந்து கலெக்டர் கோவிந்தராஜிடம் புகார் மனுவும் கொடுத்தனர். ஆனால் கடைகள் மூடப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள், பொதுமக்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கூறி ஜவகர் பஜாரில் செயல்பட்டு வந்த ஒரு டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த கடை மூடப்பட்டது.
பரபரப்பு
தற்போது ஒரு கடை மட்டும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பகல் 12 மணி அளவில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி மதுப்பிரியர்கள் மூடப்பட்ட கடை முன்பு நின்று கொண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். தொடர்ந்து ஜவகர் பஜார் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கரூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங் களில் டாஸ்மாக் கடைகள் இருக்க கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது என்று கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்று மதுபானம் வாங்கி சென்றனர். இதனால் நேற்று மதியம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story