ரூ.30 லட்சம் கடன் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது வழக்கு


ரூ.30 லட்சம் கடன் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 May 2017 3:30 AM IST (Updated: 12 May 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

ரூ.30 லட்சம் கடன் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது வழக்கு

திருச்சி,

சேலம் மாவட்டம் ராணிபேட்டையை சேர்ந்தவர் வீரபாண்டியன் (வயது 56). இவர் திருச்சி தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், நான் வங்கி மூலம் கடன் பெற்று தொழில் தொடங்குவதற்காக பல்வேறு வங்கிகளில் ரூ.30 லட்சம் கடனாக கேட்டிருந்தேன். இதற்காக எனது செல்போன் எண்ணையும் கொடுத்திருந்தேன். இந்நிலையில் ஒரு நபர் என்னுடையை செல்போனுக்கு தொடர்பு கொண்டு தனியார் வங்கியில் இருந்து பேசுவதாகவும், திருச்சிக்கு வந்தால் ரூ.30 லட்சத்தை தருகிறேன் என்றும் கூறினார்.

இதையடுத்து நான் பணத்தை வாங்குவதற்காக நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்து ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினேன். அப்போது அந்த நபரை தொடர்பு கொண்டு பேசுகையில், நீங்கள் தில்லைநகர் பகுதியில் உள்ள ஓட்டல் அருகே இன்று (அதாவது நேற்று) வந்தால் ரூ.30 லட்சம் தருகிறேன் என்றும், வரும்போது கடன் தொகை பெறுவதற்கு முன்பணமாக ரூ.5 லட்சம் கொண்டு வரவேண்டும் என்றும் தெரிவித்தார். 

Related Tags :
Next Story