பஸ்- மோட்டார்சைக்கிள் மோதி விபத்து: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாணவர் சாவு


பஸ்- மோட்டார்சைக்கிள் மோதி விபத்து: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாணவர் சாவு
x
தினத்தந்தி 12 May 2017 3:45 AM IST (Updated: 12 May 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிளில் சென்ற போது பஸ்சில் அடிபட்டு காயம் அடைந்து சிகிச்சை பெற்ற என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது19). இவர் தஞ்சையை அடுத்த திருமலை சமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார். அதே பல்கலைக்கழகத்தில் ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த நித்தேஷ் (19) என்பவரும் என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார்.

இவர்கள் பல்கலைக்கழக பகுதியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு தஞ்சைக்கு வந்து விட்டு பின்னர் மோட்டார்சைக்கிளில் விடுதிக்கு திரும்பினர். தஞ்சை- திருச்சி புறவழிச்சாலையில் வல்லம் பிரிவு சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

அப்போது திருச்சியில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ் பிரிவு சாலையில் வந்த போது வல்லம் நகருக்கு செல்வதற்காக திரும்பிய போது பஸ்சின் பக்கவாட்டில் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் நித்தேசுக்கு கால் எலும்பு முறிந்தது. கார்த்திக் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார்.

உடனடியாக 2 பேரையும் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று அதிகாலையில் கார்த்திக் பரிதாபமாக இறந்தார். நித்தேசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த சம்பவம் குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Tags :
Next Story