நெல்லிக்குப்பம் மோட்டூர் அருகே குடிநீர் வராததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


நெல்லிக்குப்பம் மோட்டூர் அருகே குடிநீர் வராததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 May 2017 4:00 AM IST (Updated: 12 May 2017 9:48 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையை அடுத்த நெல்லிக்குப்பம் அருகே குடிநீர் வராததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டையை அடுத்த முகுந்தராயபுரம் ஊராட்சி நெல்லிக்குப்பம் மோட்டூர் அருகே உள்ள திருவள்ளுவர் நகரில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த திருவள்ளுவர் நகர் பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் நேற்று காலை பொன்னை– லாலாப்பேட்டை சாலையில் நெல்லிக்குப்பம் மோட்டூர் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன், முகுந்தராயபுரம் ஊராட்சி செயலாளர் சுதாகர், சிப்காட் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் கூறியதை யடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பொன்னை– லாலாப்பேட்டை சாலையில் நடைபெற்ற இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story