நடிகை மலைக்கா அரோரா – அர்பாஸ்கான் தம்பதிக்கு விவாகரத்து மும்பை குடும்ப நல கோர்ட்டு உத்தரவு


நடிகை மலைக்கா அரோரா – அர்பாஸ்கான் தம்பதிக்கு விவாகரத்து மும்பை குடும்ப நல கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 13 May 2017 4:00 AM IST (Updated: 13 May 2017 3:25 AM IST)
t-max-icont-min-icon

இந்தி நடிகர் அர்பாஸ்கான்– மலைக்கா அரோரா தம்பதிக்கு விவாகரத்து வழங்கி மும்பை பாந்திரா குடும்ப நல கோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

இந்தி நடிகர் அர்பாஸ்கான்– மலைக்கா அரோரா தம்பதிக்கு விவாகரத்து வழங்கி மும்பை பாந்திரா குடும்ப நல கோர்ட்டு உத்தரவிட்டது.

நட்சத்திர தம்பதி

பிரபல இந்தி நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ்கான். நடிகரும், தயாரிப்பாளருமான இவர், 1998–ம் ஆண்டு நடிகை மலைக்கா அரோரா மீது காதல் வயப்பட்டார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அர்கான் என்ற மகன் உள்ளான்.

நட்சத்திர தம்பதிகளான திருமண வாழ்க்கையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்து விவாகரத்து கேட்டு கடந்த ஆண்டு மும்பை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

விவாகரத்து

இந்த வழக்கில் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு, 6 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் பாந்திரா குடும்பநல கோர்ட்டில் இவர்களது மனு மீண்டும் விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது அர்பாஸ்கான் மற்றும் மலைக்கா அரோரா ஆகியோர் தங்களது வக்கீல்களுடன் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்மிதா சாவாஸ்கர், விசாரணை நிறைவில் இருவருக்கும் பரஸ்பர சம்மதத்தின்பேரில் விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்தார்.


Next Story