கொல்லிமலையில்,வங்கி அதிகாரி போல் பேசி சத்துணவு அமைப்பாளரிடம் பண மோசடி
கொல்லிமலையில் வங்கி அதிகாரி போல் செல்போனில் பேசி, சத்துணவு அமைப்பாளரிடம் ஏ.டி.எம். கார்டு விவரங்களை
சேந்தமங்கலம்,
கொல்லிமலையில் உள்ள வாழவந்திநாடு ஊராட்சியை சேர்ந்தவர் வசந்தி (வயது 40). இவர் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் மேலாளர் பேசுவதாக செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் பேசினார். அப்போது அவர், உங்களது ஏ.டி.எம். எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை சரி பார்க்க வேண்டும் தெரிவியுங்கள் என்று கேட்டுள்ளார்.
பணம் மோசடிஇதை நம்பிய வசந்தி செல்போனில் பேசிய அந்த நபரிடம், தன்னுடைய ஏ.டி.எம். எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவித்துள்ளார். அதன்பிறகு சில மணி நேரத்தில் வங்கிக்கு சென்ற அவர் பணம் எடுக்க முற்பட்ட போது வங்கி கணக்கில் இருந்து ரூ.7 ஆயிரம் எடுத்துள்ளது தெரிய வந்தது.
இது குறித்து வாழவந்திநாடு போலிசில் வசந்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சத்துணவு அமைப்பாளர்களுக்கு மாத சம்பளம் அனுப்பும் போது ஏ.டி.எம். கார்டை கொண்டு பணம் எடுப்பதை கவனித்த மர்ம நபர் யாரோ ஒருவர் இந்த பண மோசடியை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.