உணவுப்பொருட்களின் தரம் குறித்து புகார் தெரிவிக்க ‘வாட்ஸ்–அப்’ எண் அறிமுகம் கலெக்டர் தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப்பொருட்களின் தரம் குறித்து புகார் தெரிவிக்க ‘வாட்ஸ்–அப்’ எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுகள் பெறுவதற்கு உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் விழிப்புணர்வு கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
ஆண்டு ஒன்றுக்கு ரூ.12 லட்சத்திற்கு கீழ் தொழில் செய்யும் உணவு வணிகர்கள் www.fssai.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது அரசின் இ–சேவை மையங்கள் மூலமாக பதிவுச்சான்று பெற்றுக்கொள்ள வேண்டும்.
புகார் தெரிவிக்கலாம்மேலும் உணவுப்பொருட்களின் தரம் குறித்து ஏதேனும் புகார்களை தெரிவிக்க ‘வாட்ஸ்–அப்’ எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கோடை காலங்களில் ரசாயன கற்கள் மூலம் செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனைக்காக வைக்கப்படும் பழங்கள், தரம் இல்லாத குடிநீர் பாட்டில்கள், பால் மற்றும் பால் பொருட்கள், காலாவதியான உணவுப்பொருட்கள் ஆகியவை ஏதேனும் கடைகளில் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அதுதொடர்பான புகார்களை 94440 42322 என்ற ‘வாட்ஸ்–அப்’ எண்ணில் தெரிவிக்கலாம். அவ்வாறு புகார் தெரிவிக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.