மதுபாட்டில்கள் விற்ற அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் கைது ருவாண்டா நாட்டை சேர்ந்தவர்
ருவாண்டா நாட்டை சேர்ந்தவர் மனிஷ்ம்வே டெனிடீயூவினு(வயது 27).
சிதம்பரம்,
ருவாண்டா நாட்டை சேர்ந்தவர் மனிஷ்ம்வே டெனிடீயூவினு(வயது 27). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. தகவல் தொழில்நுட்பம் இறுதியாண்டு படித்து வரும் இவர், மாரியப்பநகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட அண்ணாமலைநகர் போலீசாருக்கு, மனிஷ்ம்வே டெனிடீயூவினு வீட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 12 மதுபாட்டில்கள் மற்றும் 72 பீர் டீன்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story