திருக்குவளையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி போராட்டம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடந்தது


திருக்குவளையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி போராட்டம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 14 May 2017 12:54 AM IST (Updated: 14 May 2017 12:53 AM IST)
t-max-icont-min-icon

திருக்குவளையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் திருக்குவளை தாசில்தார் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கீழையூர் ஒன்றிய தலைவர் சாந்தா, தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் செல்வி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் லதா, கீழையூர் ஒன்றிய செயலாளர் சுஜாதா, மாவட்ட குழுவை சேர்ந்த சுபாதேவி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

முதியோர் உதவி தொகை

போராட்டத்தில் பொது வினியோக திட்டத்தை பலப்படுத்த வேண்டும். வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்ட பின்பு உணவு தானிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். மண்எண்ணெய் அளவை குறைக்கக்கூடாது. அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேவையான ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும். 60 வயதான அனைவருக்கும் முதியோர் உதவி தொகை வழங்க வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள உதவி தொகையினை திரும்ப அனைவருக்கும் வழங்க வேண்டும். விவசாய கூலி தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலையை 200 நாட்களாகவும், தினக்கூலியை ரூ.400–ம் உயர்த்தி வழங்க வேண்டும். திருக்குவளையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை உடனே அப்புறப்படுத்த வேண்டும். பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை உடனே நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதார் எண்ணை கட்டாயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.


Next Story