இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிடவில்லை என்றால் தமிழகத்தில் 1965–ம் ஆண்டு போல மீண்டும் போராட்டம் வெடிக்கும்


இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிடவில்லை என்றால் தமிழகத்தில் 1965–ம் ஆண்டு போல மீண்டும் போராட்டம் வெடிக்கும்
x
தினத்தந்தி 14 May 2017 4:45 AM IST (Updated: 14 May 2017 4:13 AM IST)
t-max-icont-min-icon

இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிடவில்லை என்றால் தமிழகத்தில் 1965–ம் ஆண்டு போல மீண்டும் போராட்டம் வெடிக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேட்டி

வண்டலூர்,

காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் இந்தி திணிப்பை எதிர்த்தும், ‘நீட்’ தேர்வில் தமிழகத்திற்கு விதிவிலக்கு கோரியும் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடந்தது.

கருத்தரங்கிற்கு ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி வரவேற்றார். தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் எம்.எல்.ஏ., தி.மு.க. செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

முடிவில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் நன்றி கூறினார். கருத்தரங்கில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மீண்டும் வெடிக்கும்

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்விற்கு மத்திய அரசு விலக்கு அளிக்கவேண்டும், தமிழக அரசு சட்டமன்றத்தில் நீட் தேர்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றியது. அதன்பிறகு இதைப்பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை. மாறாக பதவி பிரச்சினையில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இந்தி திணிப்பை மத்திய அரசு உடனடியாக கைவிடவேண்டும். இல்லை என்றால் தமிழகத்தில் 1965–ம் ஆண்டு போல இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் மீண்டும் வெடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story