பாந்திராவில் ஆசிரியை வீட்டில் ரூ.27 லட்சம் நகை, பணம் கொள்ளை
பாந்திராவில் ஆசிரியை வீட்டில் ரூ.27 லட்சம் நகை, பணம் கொள்ளை போனது.
மும்பை,
பாந்திராவில் ஆசிரியை வீட்டில் ரூ.27 லட்சம் நகை, பணம் கொள்ளை போனது.
நகை, பணம் கொள்ளை
மும்பை பாந்திரா டர்னர்ரோடு பகுதியை சேர்ந்தவர் நூர்ஹனா (வயது 54). இவரது மனைவி புனேயில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அண்மையில் மனைவியை பார்ப்பதற்காக நூர்ஹனா புனே சென்றிருந்தார். பின்னர் புனேயில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை, பணம் காணாமல் போயிருந்தன.
யாரோ மர்மஆசாமிகள் அவர் புனே சென்றிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீடு புகுந்து கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது.
போலீஸ் விசாரணை
கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.27 லட்சம் ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பவம் குறித்து பாந்திரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்காக அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story