திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் மதுக்கடை திறக்கக் கூடாது என்ற வரலாற்று ஆதாரத்தை சுட்டிக்காட்டி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருவெறும்பூர்,
திருவெறும்பூரை அடுத்துள்ளது சோழமாதேவி ஊராட்சி. இந்த ஊராட்சியில் துப்பாக்கி தொழிற்சாலை செல்லும் சாலையில் உள்ள மாணிக்கம் நகரில் டாஸ்மாக் கடை கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சோழமாதேவி ஊராட்சி பொதுமக்கள் கடந்த 22-ந் தேதி சாலை மறியல் செய்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த டாஸ்மாக் கடையை மூடினர்.
இதனை தொடர்ந்து சோழமாதேவி கிராம மக்கள் கடந்த 1-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில், தங்கள் ஊராட்சி பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
வரலாற்று ஆதாரம்
இந்நிலையில், தஞ்சாவூரை ஆட்சி செய்த ராஜராஜசோழனின் தேவியர்களில் ஒருவரின் பெயர் சோழமகாதேவி.
இவர் இந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதால்தான் இவ்வூர் சோழமாதேவி என அழைக்கப்படுவதாகவும், வரலாற்று சிறப்புமிக்க இவ்வூர் கைலாசமுடையார்கோவில் அருகில் ராஜராஜன்பேரம்பலம் என்கிற மண்டபத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன்பே கிராம சபைக்கூட்டம் கூடி பஞ்சமாசப்தம் என்கிற இசை வழிபாடு முடிந்ததும், மது இவ்வூரில் இருக்கக்கூடாது என கிராம மக்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது காலங்காலமாய் நடைமுறையில் இருந்து வருவதற்கான வரலாற்றுஆதாரங்கள் உள்ளதாக அவ்வூர் பெரியவர் ஒருவர் தெரிவித்தார். மேலும் கிராம சபை கூட்டத்தின்போது, முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். காலத்தில் இவ்வூரில் சாராயக்கடை திறக்கப்படாமல் அருகில் உள்ள ஊராட்சியில் தான் திறக்கப்பட்டது என்றும், சோழர் காலத்திற்கு பின் தற்போது சோழமாதேவி ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இவ்வூராட்சியில் டாஸ்மாக் கடையை எப்போதும் திறக்கக்கூடாது எனவும், பொதுமக்கள் தெரிவித்தனர்.
மீண்டும் திறப்பு
ஆனால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாணிக்கம் நகரில் மூடப்பட்ட அதே இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனையும் நடைபெற்றது. இதனால் ஆத்திரம் அடைந்த சோழமாதேவி ஊராட்சி பொதுமக்கள் மற்றும் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் நேற்று மதியம் 12 மணியளவில், அந்த டாஸ்மாக் கடைக்கு வந்து கடையை மூடும்படி கூறி முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் ஷோபா, போலீஸ் துணை சூப்பிரண்டு கலைச்செல்வம், நவல்பட்டு இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஜென்னீஸ், அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஹேமலதா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சோழர் காலத்தில் கிராமசபை கூட்டம் நடத்தி மது விற்பனை இல்லாத வரலாற்று சிறப்புமிக்க சோழமாதேவி ஊராட்சி பகுதியில், தற்போது டாஸ்மாக் கடையை திறந்திருப்பது வேதனை தருவதாகவும், கிராமசபையில் தீர்மானம் இயற்றி இருந்தால் டாஸ்மாக் கடையை திறக்்க கூடாது என்று கோர்ட்டு கூறி இருக்கும் நிலையில், மீண்டும் இதே இடத்தில் டாஸ்மாக் கடையை அமைத்தது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தற்காலிகமாக மூடினர்
அதற்கு, கிராமசபை கூட்ட தீர்மானத்தை கோர்ட்டில் சமர்ப்பித்து அங்கிருந்து உத்தரவு வாங்கி வந்தால்தான் டாஸ்மாக் கடையை மூட தற்போதைய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர். அதற்கு பொதுமக்கள், கோர்ட்டை அணுகி ஆணையை நாங்கள் பெற்று வரும் வரை டாஸ்மாக் கடையை மூடும்படி, கேட்டுக்கொண்டனர். இதனை அடுத்து அதிகாரிகள் தற்காலிகமாக அந்த டாஸ்மாக் கடையை மூடுவதாக கூறி, கடையை மூடினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story