டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் பூட்டை உடைக்க முயன்றதால் பரபரப்பு
ஓட்டப்பிடாரம் அருகே டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடையின் பூட்டை உடைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டப்பிடாரம்,
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம்- பாஞ்சாலங்குறிச்சி சாலையில், ஓட்டப்பிடாரத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ளது ஏ.கே.எஸ். நகர். இந்த நகரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மது விற்பனை நடந்து வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள், அந்த டாஸ்மாக் கடை மே 15-ந் தேதிக்குள் மாற்றப்படும் என்று கூறியதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
முற்றுகை
இந்த நிலையில் மே 15-ந் தேதியாகியும் டாஸ்மாக் கடை மாற்றப்படாததால் ஏ.கே.எஸ். நகர், இந்திரா நகர், சிலோன் காலனி, வடக்கு ஆவாரங்குளம், சுந்தரலிங்கபுரம் காலனி பகுதியை சேர்ந்த பெண்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் தலைமையில் நேற்று காலையில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே கடையை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் குடோன் மேலாளர் காளிராஜ் தலைமையிலான அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.பி.பெருமாள், ஆறுமுகம் மற்றும் பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலர், டாஸ்மாக் கடையின் பூட்டை உடைக்க முயன்றனர். அப்போது அங்கு பணியில் இருந்து போலீசார், போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினர்.
போராட்டம்
அதனை தொடர்ந்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன், மாவட்ட உதவி கலால் அலுவலர் விஜயா ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதையடுத்து பெண்கள், டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்து, டாஸ்மாக் கடை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story