வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்


வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 May 2017 4:30 AM IST (Updated: 16 May 2017 3:53 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் பல்வேறு தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் கடத்தப்படுகிறதா? என்பது குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் உள்ள பீர்முகமது(வயது 45), வீட்டில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

60 கிலோ பறிமுதல்

அதன்பேரில் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் போலீசார், பீர்முகமதுவின் வீட்டுக்கு சென்றனர். அப்போது பீர்முகமது வீட்டில் இல்லை. அந்த வீட்டின் மாடியில் சுமார் 60 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. போலீசார், அந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை மன்னார்வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story