போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்: பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தினால் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
நெல்லை,
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் மாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக டெப்போவுக்கு பஸ்களை ஊழியர்கள் கொண்டு வந்து நிறுத்தினர்.
நேற்று காலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தினால் நெல்லையில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், தென்காசி, கடையம், பாபநாசம் ஆகிய ஊர்களுக்கு குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. வெளியூரில் இருந்து நெல்லைக்கு வந்த பயணிகள் கிடைத்த பஸ்கள் மூலம் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். குறைவான பஸ்களே ஓடியதால் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுவதால் வெளியூர்களில் இருந்து நெல்லை கல்லூரிகளுக்கு வந்த மாணவர்கள் சரியான நேரத்தில் தேர்வு அறைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
மறியல் போராட்டம்
கிராமப்புறங்களுக்கு செல்கின்ற பஸ்கள் அனைத்தும் இயக்கப்படவில்லை. கங்கைகொண்டான், அணைத்தலையூர், காசியாபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு இயங்கக்கூடிய அரசு டவுன் பஸ்கள், தென்காசி, செங்கோட்டைக்கு இயக்கப்பட்டன. நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் இருந்து கிராமங்களுக்கு இயக்கப்பட வேண்டிய டவுன் பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் கிராமங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
நேற்று மதியம் கங்கைகொண்டான், அணைத்தலையூர் பகுதிக்கு பஸ்கள் இல்லாததால் அந்த பகுதி மக்கள் பஸ்நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குறைவான பஸ்கள்
அண்ணா தொழிற்சங்க பேரவை தவிர மற்ற தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் பங்கேற்றதால் இயக்கப்பட்ட பஸ்களின் முன்பக்க கண்ணாடியில் பஸ்கள் வழக்கம் போல் ஓடும் என்று அண்ணா தொழிற்சங்கத்தினர் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 டெப்போக்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இதில் 400-க்கும் குறைவான பஸ்களே மட்டுமே இயக்கப்பட்டன. பெரும்பாலான பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். நெல்லை வண்ணார்பேட்டை டெப்போவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந் தது. கலெக்டர் மு.கருணாகரன், நெல்லை சந்திப்பு, புதிய பஸ்நிலையம் மற்றும் அரசு டெப்போக்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அதிகாரிகளிடம் விடுமுறையில் உள்ள டிரைவர்கள், கண்டக்டர்களை அழைத்தும், மாற்று டிரைவர்களை வைத்தும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கூடுதல் கட்டணம்
நெல்லை மாவட்டத்தில் அனைத்து தனியார் பஸ்களும் இயக்கப்பட்டன. தனியார் பஸ்களில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து தென்காசிக்கு வழிதடத்தில் அனுமதிக்கப்படாத தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.
நெல்லை சந்திப்பில் இருந்து தென்காசிக்கு இயக்கப்பட்ட தனியார் பஸ்சில் நெல்லை சந்திப்பில் இருந்து தென்காசிக்கு ரூ.45-ம், ஆலங்குளத்திற்கு ரூ.30-ம், பாவூர்சத்திரத்திற்கு ரூ.40-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
ரெயிலில் கூட்டம்
பஸ்கள் இயக்கப்படாததால் ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவை ஆகிய ஊர்களுக்கு சென்ற ரெயில்களில் ஏறி பயணம் செய்தனர். இதனால் ரெயிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் செங்கோட்டை சென்ற பயணிகள் ரெயில், திருச்சி சென்ற இண்டர்சிட்டி ரெயில் ஆகியவற்றில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Related Tags :
Next Story