2 டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தாலிக்கயிற்றுடன் பெண்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு


2 டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தாலிக்கயிற்றுடன் பெண்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
x
தினத்தந்தி 16 May 2017 4:15 AM IST (Updated: 16 May 2017 4:00 AM IST)
t-max-icont-min-icon

கொத்தமங்கலத்தில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தாலிக்கயிற்றுடன் பெண்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதனிடம் அப்பகுதி பெண்கள் தாலிக்கயிற்றுடன் சென்று கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், கொத்தமங்கலத்தில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டுமென, ஏற்கனவே இரண்டு முறை நாங்கள் போராட்டம் நடத்தினோம். இது குறித்து கடந்த வாரம் கலெக்டரிடம் மனு அளித்தோம். மேலும் கடந்த 1–ந்தேதி கொத்தமங்கலத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்திலும் அந்த டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், அந்த கடைகள் அகற்றப்படவில்லை. எனவே அவற்றை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். மனு அளிக்க வந்த பெண்கள் தாலிக்கயிற்றுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story