டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்,
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் வீரையன் தலைமை தாங்கினார். தலைவர் எட்வின்ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில், மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் நியமனம் செய்ய வேண்டும். புதிதாக இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபடும் கடை மேற்பார்வையாளர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்த ஊழியர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கைக்கு உதவிடும் வகையில் கல்விக்கடன் ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Related Tags :
Next Story