குப்பைகளை அகற்ற கோரி சாலைமறியல் செய்த காங்கிரசார் கைது
குப்பைகளை அகற்ற கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
குளச்சல்,
குழித்துறை நகராட்சி பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்கப்படாத இடங்களில் பொதுமக்கள் குப்பைகளை தரையில் கொட்டுகின்றனர். அந்த குப்பைகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசுவதாகவும், எனவே, குப்பைகளை அகற்ற கோரி நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் காங்கிரசார் அறிவித்திருந்தனர்.
அதன்படி, நேற்று காலை குளச்சல் நகராட்சி அலுவலகம் முன்பு காங்கிரசார் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிழக்கு மாவட்ட தலைவர் பாலையா, பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், செயலாளர் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென நகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
35 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சாலை மறியலில் ஈடுபட்ட மாநில மீனவர் அணி தலைவர் சபீன் உள்பட 35 பேரை கைது செய்து வாகனத்தில் ஏற்றி குளச்சல் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

Related Tags :
Next Story