தெரு வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம்


தெரு வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 May 2017 4:15 AM IST (Updated: 17 May 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

தெரு வியாபாரிகளுக்கு அடையாள அட்டையை உடனே வழங்க வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணம்,

கும்பகோணத்தில் தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், ஏ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்க உறுப்பினர்கள் சிவக்குமார், அருமைராஜ், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ..டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாநிலக்குழு உறுப்பினர் மதியழகன், சட்ட ஆலோசகர் பாரதி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். தற்போது வியாபாரம் செய்கின்ற பகுதிகளில் இடையூறு இன்றி வியாபாரம் செய்ய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். தெரு வியாபாரிகள் அனைவருக்கும் உடனடியாக அடையாள அட்டை வழங்கவேண்டும். முறையாக தேர்தல் நடத்தி வணிகக்குழு அமைத்திட வேண்டும். மாவட்ட கலெக்டர் தலைமையில் மாதம் ஒரு முறை தெரு வியாபாரிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்திடவேண்டும். எளிய முறையில் வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும். சில்லறை வியாபாரத்தில் அன்னிய முதலீட்டிற்கு ஆதரவளிக்கக் கூடாது. சிறு வியாபாரிகளையும், தெரு வியாபாரிகளையும் பாதுகாத்திட வேண்டும். பொது வினியோக முறையை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.


Next Story