டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பெண்களால் பரபரப்பு
செந்துறை அருகே டாஸ்மாக் கடையை பெண்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆர்.எஸ்.மாத்தூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்நிலையில் நேற்று அந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் கடையின் முன்பு திரண்டனர். இதனை கண்ட டாஸ்மாக் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து பெண்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்களை அடித்து நொறுக்கினர். பின்னர் மதுபாட்டில்களை வெளியே தூக்கி வீசினர்.
போட்டி போட்டு.....
அப்போது அங்கிருந்த ஆண்கள் மதுபாட்டில்களை போட்டி போட்டு எடுத்தனர். இந்நிலையில் பெண் ஒருவர் பீர்பாட்டிலை உடைத்து வைத்து கொண்டு யாராவது மதுபாட்டில்களை எடுத்தால் குத்தி விடுவேன் என்று ஆவேசமாக கூறினார். இதைத்தொடர்ந்து மது பாட்டில்களை யாரும் எடுக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் மற்றும் வருவாய் துறை யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பரபரப்பு
அப்போது பெண்கள் அவர்கள் முன்பாக மதுபாட்டில்களை உடைத்தனர். பின்னர் பெண்கள் இந்த டாஸ்மாக் கடையால் எங்கள் குடும்பமே சீரழிந்து விட்டது. குடும்பத்தை அழிக்கும் இந்த டாஸ்மாக் கடை எங்கள் ஊருக்கு வேண்டாம் என்றனர். மேலும் கடையை திறந்தால் மீண்டும் அடித்து நொறுக்குவோம் என்று கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story