ஊட்டி, குன்னூரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 4 கட்டிடங்களுக்கு சீல் அதிகாரிகள் நடவடிக்கை
ஊட்டி, குன்னூரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 4 கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் இங்கு கட்டிடங்கள் கட்டுவதை வரைமுறைப்படுத்த மாஸ்டர் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தை மீறி ஊட்டி நகராட்சியில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை ஐக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
3 கட்டிடங்களுக்கு சீல்
இதன்படி ஊட்டி நகராட்சியில் ஆயிரத்து 337 கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக கணக்கிடப்பட்டது. இந்த கட்டிடங்கள் மீது அவ்வப்போது நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களது கட்டிடத்தை வரைமுறை படுத்தி தரக்கோரி தமிழக அரசிற்கு கட்டிட உரிமையாளர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 3 கட்டிடங்களின் விண்ணப்பங்களை அரசு அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். இதனை தொடர்ந்து மேற்கண்ட 3 கட்டிடங்களை சீல் வைக்கும் பணியில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) டாக்டர் பிரபாகர் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்டனர்.
குன்னூர்
இதுபோல் குன்னூர் நகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சீல் வைக்கும் பணி நேற்றும் நடைபெற்றது. குன்னூர் நகராட்சி கமிஷனர் முகமது சிராஜ் அறிவுரையின் பேரில் நகரமைப்பு அலுவலர் சுடலையாண்டி ரவி, ஆய்வாளர் ராஜ்குமார், உதவியாளர் சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் விதிமுறை மீறல் கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் குன்னு£ர் காலேஜ் ரோட்டில் உள்ள ஒருவரது வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. இதுபோன்று வி.பி.தெரு, பஸ் நிலையம், மவுண்ட்ரோடு ஆகிய பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைத்திருந்த தனியார் விளம்பர பலகைகள்அகற்றப்பட்டன.

Related Tags :
Next Story