தென்னை மரம் முறிந்து விழுந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சாவு
திருவையாறில் வீசிய சூறைக்காற்றில் தென்னை மரம் முறிந்து விழுந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சாவு
திருவையாறு,
திருவையாறு வடக்கு வீதியை சேர்ந்த கணேசன் மகன் ராஜா (வயது 57). இவர் வருவாய்த்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர் சம்பவத்தன்று வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது பக்கத்தில் இருந்த தென்னை மரம் திடீரென வீசிய சூறைக்காற்றில் முறிந்து ராஜா மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜாவை சிகிச்சைக்காக திருவையாறு அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி தனலட்சுமி (29) கொடுத்த புகாரின்பேரில் திருவையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story