செல்லியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
பாடாலூரில் உள்ள செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அய்யனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 9-ந் தேதி சுவாமி குடியழைத்தல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நாள்தோறும் செல்லியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து கடந்த 15-ந் தேதி அய்யனார் சுவாமிக்கும், 16-ந் தேதி செல்லியம்மனுக்கும் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு முள்படுகளம் நிகழ்ச்சி நடை பெற்றது.
தேரோட்டம்
அதை தொடர்ந்து நேற்று காலை செல்லியம்மனுக்கு மஞ்சள் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து செல்லியம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காலை 12 மணிக்கு செல்லியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து நாதஸ்வர இசை, வாணவேடிக்கையுடன் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக அசைந்து ஆடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் குவிந்து நின்று செல்லியம்மனுக்கு அர்ச்சனை செய்தனர். தேரோட்டத்தில் பாடாலூர், காரை, தெரணி, இரூர், ஆலத்தூர்கேட், பொம்மனப்பாடி, செட்டிகுளம், குரூர், நாட்டார்மங்கலம், சிறுவயலூர், ஊட்டத்தூர், திருவிளக் குறிச்சி, வரகுப்பை, பெருமாள்பாளையம், நாரணமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புறகிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கிய பிரமுகர்கள் செய் திருந்தனர்.

Related Tags :
Next Story