போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்: வழக்கம்போல் அரசு பஸ்கள் ஓடின


போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்: வழக்கம்போல் அரசு பஸ்கள் ஓடின
x
தினத்தந்தி 18 May 2017 4:30 AM IST (Updated: 18 May 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் நேற்று நாகையில் வழக்கம் போல் அரசு பஸ்களும் ஓடின.

நாகப்பட்டினம்,

ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகையில் குறைவான பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போக்குவரத்து தொழிற் சங்க நிர்வாகிகள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

அரசு பஸ்கள் ஓடின

வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் கடந்த 2 நாட்களாக நீடித்து வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து நேற்று நாகையில் வழக்கம் போல் அனைத்து அரசு பஸ்களும் ஓடின. இதனால் பொதுமக்கள் இடையூறு இன்றி அரசு பஸ்களில் பயணம் செய்தனர்.


Related Tags :
Next Story