மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்


மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 18 May 2017 3:45 AM IST (Updated: 18 May 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே மதுக்கடையை மூடக்கோரி கிராமமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள தளிக்கோட்டை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் முருகன் கோவில் அருகே மதுக்கடை அமைந்துள்ளது. இதனால் இந்த மதுக்கடையை மூடக்கோரி தளிக்கோட்டை கிராமமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் தளிக்கோட்டையை சேர்ந்த வக்கீல் முருகானந்தம் தலைமையில் நேற்று மதியம் கிராம மக்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த பரவாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், டாஸ்மாக் துணை மேலாளர் ராஜகோபால் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 15 நாட்களுக்குள் இந்த மதுக்கடையை மூடுவதாக டாஸ்மாக் துணை மேலாளர் ராஜகோபால் எழுத்து பூர்வமாக உறுதிமொழி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கிராமமக்கள் கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story