திருச்சியில் கோவில் குளம் தூர்வாரும் பணியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
திருச்சியில் கோவில் குளம் தூர்வாரும் பணியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும், இந்த பணியை ஆட்சியாளர்கள் தடுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.
திருச்சி,
தமிழகத்தில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் குடிநீர் பிரச்சினையை மையமாக வைத்து, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய குளங்கள் மற்றும் குட்டைகளை, அது அரசு துறையாக இருந்தாலும், அறநிலையத்துறை அல்லது தனியாருக்குச் சொந்தமான குளங்களாக இருந்தாலும் அவைகளை எல்லாம் முறையோடு சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியைப் பெற்று, தேவைப்பட்டால் அரசு துறைகளை சார்ந்திருக்கக்கூடிய அதிகாரிகளின் ஒத்துழைப்போடு தூர் எடுக்க வேண்டும் என்று தி.மு.க. நிர்வாகிகளுக்கு நான் ஏற்கனவே என்னுடைய வேண்டுகோளை வைத்திருந்தேன். அந்தப் பணிகள் இன்றைக்கு தமிழகத்திலே பல்வேறு இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
77 ஆண்டுகளுக்கு பிறகு...
அந்த அடிப்படையில் திருச்சியில், சட்டமன்ற உறுப்பினர் நேருவின் தொகுதியில் தனியாருக்கு சொந்தமாக உள்ள இந்த கோவில் குளம் 77 ஆண்டுகளுக்கு முன்பு தூர் எடுக்கப்பட்டிருக்கிறது. 77 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இந்த குளத்தில் தூர் எடுக்கும் பணி நடைபெறுகிறது.
இந்தப் பணியைக்கூட நடத்தக்கூடாது என்று, ஆட்சியாளர்கள், அதிகாரத்தில் இருக்கக் கூடியவர்கள் எவ்வளவோ மிரட்டிப் பார்த்தார்கள். இவர் வந்து செய்யக்கூடாது என்று எவ்வளவோ தடுத்துப் பார்த்தார்கள் ஆனால், தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இந்த குளத்தை தூர்வார அவர்களிடம் முறையாக அனுமதி பெற்று, சட்டமன்ற உறுப்பினரின் சீரிய முயற்சியோடு இந்தப் பணி சிறப்பாக நடைபெற்றிருக்கிறது.
ரூ.5 லட்சம் செலவு
இதனை அடுத்து கரூருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறேன். போகிற வழியில் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் இதேபோன்று 2 இடங்களில் தூர்வாரும் பணிகள் நடந்திருக்கின்றன. அவற்றையும் பார்வையிட இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் அவரிடம், “இந்தப் பணிக்கு எவ்வளவு தொகை செலவானது?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மு.க.ஸ்டாலின், “குறைந்த பட்சம் 5 லட்ச ரூபாய் செலவாகியிருக்கிறது. பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. இன்னும் ஐந்தாறு நாட்களில் முடிவடையும்” என்றார்.

Related Tags :
Next Story